"கோ-வின்" செயலியில் ஒரு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி 6 பேர் வரை பதிவு செய்துகொள்ளும் வசதி அறிமுகம்

0 2859
"கோ-வின்" செயலியில் ஒரு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி 6 பேர் வரை பதிவு செய்துகொள்ளும் வசதி அறிமுகம்

மத்திய அரசின் கோ - வின் செயலியில் ஒரு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, 6 பேர் வரை பதிவு செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி திட்டத்தை கண்காணிக்க அரசுத்துறைகளுக்கு உதவிடும் வகையில் கோ - வின் செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலியில் முன்பு ஒரு செல்பேசி எண்ணில் இருந்து 4 பேர் வரை மட்டுமே பதிவு செய்யும் வசதி இருந்தது.

தற்போது அந்த எண்ணிக்கை 6ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் நுட்பக்கோளாறு காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்கள் Co-WIN செயலியில் தவறாக இடம் பென்றிருந்தால் பயனாளிகள் திருத்திக்கொள்ளும் வசதியும் புதிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.

பயனாளிகள் Co-Win செயலியில் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பான திருத்தங்களை மேற்கொண்ட பின் அடுத்த 3 முதல் 7 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments